Pages

Monday, November 7, 2011

பிரபாகரன்-25 குறிப்புகள்


பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.

ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.

தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா…

Sunday, November 6, 2011

இரத்த தானம் செய்வீர்!

good-day-desi-glitters-3


 இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள்


 இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக் களைச் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினா லேயோ அல்லது வேறு ஏதாவது நோயினா லேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது அங்கு தேவைப்படுவது இரத்தம். அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினை செய்வதற்குச் சமம். இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ, சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல, இன்று நம்மில் 20-30% மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினை செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.


இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்

இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்
இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது
இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இரத்த தானம் செய்பவர் பெண் எனின் தேவையான தகுதிகள்
மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும்
தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் இரத்த தானம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
மது அருந்தியவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம்.
புகைப்பிடித்திருப்பின் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது சிறந்தது. இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப் பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்றபாதிப்புகளை உருவாக்கும்.
ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்கு தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.
இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். போதிய உணவு, உறக்கம் இரண்டும் மிகவும் அவசியம்.
இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும்.
இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த வங்கியின் செயல்பாடுகள்

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4½ (நான்கரை) முதல் 5½ (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது.
இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கி களில் குளிரூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது.
இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது.
ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாது காக்கப்படுகின்றது.
தூய இரத்தம் (Whole blood)
35 நாட்கள்
இரத்தச் சிகப்பணு (Packed Red cells)
42 நாட்கள்
இரத்தத் தட்டுக்கள் (Platelets)
5 நாட்கள்
பிளாஸ்மா (Plasma)
1 வருடம்
இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப்படுகின்றது.
இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்கு பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.
இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.
இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
தற்போதைய ஆய்வு களில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
ஹிமோகுளோபின் (Heart attack) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.
இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் (Heamoglobin) சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படு
கின்றது.
இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.
மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.
இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறர்க்கும் அளிக்கின்றது.
இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!
Author: எம். ஞானதீபன் 
எனது புகைப்படம்

நாம் நினைவாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?



`என்னால் படித்ததை நினைவில் வைக்க முடியவில்லை' என சில மாணவர்கள் ஆதங்கப்படுவார்கள் . அத்தனை செய்திகளையும் மூளையில் போட்டு வைத்தால் அது எப்படி தாங்கிக் கொள்ளும் என்றும் சிலர் கருத்துச் சொல்வார்கள்.
ஆனால் `மனித மூளைக்கு மிக அபார திறமை இருக்கிறது' என ஆராய்ந்து அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இவர்கள் மனித மூளையில் இரண்டு ``குயிண்டிலியன்'' (Quintillion) அளவுக்கு சின்னசின்ன செய்திகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் '' என்று ஆராய்ந்தும் சொல்லியிருக்கிறார்கள்.
 
அதாவது `ஒன்று' என்ற எண்ணிற்குபிறகு 18 பூஜ்யங்களை சேர்த்தால் எவ்வளவு மதிப்புவருமோ அதுதான் `குயிண்டிலியம்' என்பதன் மதிப்பாகும். அதாவது மனித மூளையின் சக்தி 40 விதமான மொழிகளை நினைவில் கொள்ளுகின்ற அளவுக்கு `அபாரசக்தி' கொண்டது.
 
 
இப்படி அதிக கொள்ளளவு கொண்ட மனித மூளையில் தேவையான அளவு தகவல்களைத் திரட்டி , சேமித்து பாதுகாப்பாக முறைப்படி வைக்காததுதான் இன்றைய மாணவ,மாணவிகளின் குறைபாடாகும்.
 
ஓரு நூலகத்தில் பலவிதமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் அந்தப்புத்தகங்கள் ஒழுங்கான முறையில் அடுக்கிவைக்கப்படவில்லை. இதனால் நமக்குத் வேண்டிய புத்தகத்தை உடனே கண்டுபிடிக்க இயலாது. தேவையான புத்தகத்தை எளிதான முறையில்கண்டறிவதற்கு ``புத்தகப்பட்டியல் அடங்கிய குறிப்பேடும் (Catalogue) அவசியம் தேவை''
 
இந்த நூலகம் போலவே நமது மூளையும் ஒரு ``ஓழுங்கில்லாத நூலகம்'' (Dis-Organised) ஆகும். தேவையான புத்தகங்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் குறிப்பேடு போல மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் கண்டுபிடிக்க உதவும்.
 
 
குறிப்பேடு போல மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் நினைவில் கொள்ள நமது மூளைக்கு நன்கு பயிற்சி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை , குறிப்பிட்ட நேரத்தில் நினைவில் கொண்டுவரும் ``நினைவாற்றல் கலையை'' வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுவதற்க்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ``தொடர்பு ஏற்படுத்துதல் முறை' '(ASSOCIATION) முறை ஆகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற பொழுதுதான் நாம் கற்றபாடம் நினைவில் நிற்கின்றது. அறிவை பெருக்குவதற்கு `தொடர்புப்படுத்துதல்' மிகவும் உறுதுணையாக அமையும்.
 
சிறுகுழந்தையாக இருக்கின்ற பொழுது சில தகவல்களை நமக்குச் சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் நம்மை அறியாமலேயே நம்முடைய மூளையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். நேரம் வரும்பொழுது அந்த செய்திகள் நம்மை அறியாமையிலேயே ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்.
 
உதாரணமாக பக்கத்து வீட்டில் பாம்பு வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ``பாம்புபாம்பு''சத்தம்போட்டு அழைக்கிறார்கள். அவர்கள் அருகில் சென்று ``பாம்பு எங்கே சென்றது ?'' என்று கேட்டு நாமும் தேட ஆரம்பிப்பதற்குள், நமது மனதில் எத்தனையோ விதமான எண்ணங்கள் வந்து நிழலாடும். சின்னக் குழந்தையாய் இருந்தபோது பள்ளியில் பார்த்த பச்சைப் பாம்பு , பாம்பு கடித்து இறந்து போன மாமா பையன், பாம்பு வடிவில் சினிமாவில் வந்த நாகக்கன்னி. பாம்பு கடிக்கு அரைக்குறையாய் தெரிந்து வைத்திருந்த சித்த மருத்துவம் . இப்படி கூடைகூடையாய் துண்டுத் தகவல்கள் பாம்பைப்பற்றி நம் எண்ணத்தில் தோன்றும். இவையெல்லாம் நாம் அறிந்தோ அறியாமலயோ தெரிந்து வைத்த தகவல்கள் தானே?
 
எனவேதான் ``ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒருதகவலைக் கவனமாக நினைவில் கொண்டால் அந்தத்தகவல் மனதில் நிலைத்து நிற்கும்'' என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
 
உதாரணமாக நீங்கள் கீழ்க்கண்ட பத்து வார்த்தைகளை வரிசையாக நினைவில் வைக்க வேண்டும் என முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம்.
 
1. மேஜை.
2. நண்பர்கள்.
3. வியாபாரம்
4. உரையாடல்
5. பழக்கவழக்கம்
6. விளையாட்டு
7. செய்தி அறிதல்
8. பாசம் கொள்ளுதல்
9. வெற்றி
10. படிப்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை வரிசையாக நினைத்துக்கொள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே நீங்கள் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
 
 
உதாரணமாக ஒரு புதிய சூழலை மனதில் உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் பலசரக்குக் கடை மேஜை அருகே உங்கள் நண்பர்கள் வந்து நின்று நீங்கள் வியாபாரம் செய்வதை கவனிக்கிறார்கள். நீங்கள் வாடிக்கையாளரிடம் உரையாடல் செய்வதைப் பார்க்கிறார்கள். உங்கள் பழக்கவழக்கம் ஒரு விளையாட்டைப் போல இனிமையாக இருக்கும் செய்தி அறிந்ததால் உங்கள் மீது பாசம் கொள்கின்றார்கள் . உங்கள் வியாபார வெற்றி , உங்கள் சிறந்த படிப்பினால் தான் உருவானது என எண்ணுகிறார்கள்.
 
இப்படி தொடர்பை ஏற்படுத்திப் பார்த்தால் மேலேகுறிப்பிட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் வரிசையாக மனதில் தங்கிவிடும்.
 
நினைவாற்றலை வளர்க்க உதவும் இன்னொரு முறை ``காட்சிப் படுத்துதல்'' (Visualisaion) ஆகும். அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களால் பெறப்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை காட்சியாக மனதில் உருவாக்கி நினைவில் நிறுத்திக் கொள்வதை இது குறிக்கும்.
 
இந்த முறையில் ஒரு தகவலை நினைவில் வைத்து கொள்ளும்போது கற்பனை (Imagination) செய்து , ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். படைப்புத்திறன் (Creative power) மூலம் நினைவில் கொள்ளும் இந்த முறையை பல மாணவிகள் தங்களின் ` நினைவாற்றலை' வளர்த்துக் கொள்ள பயன்படுத்துகிறார்கள்.
 
 
உதாரணமாக வரலாற்றுப் பாடத்தில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்ததை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஒரு மாணவன் விரும்புகிறான். இந்த வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ள இந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை தந்த காலத்தையும் , அவர்களுடைய நாகாறிக முறை எப்படி அமைந்திருக்கும்? என்பதையும் முதலில் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு வந்த போர்ச்சுகீசியரான வாஸ்கோடகாமா `கோழிக்கோடு' என்னுமிடத்தில் கடற்பயணம் மூலம் வந்தததையும் , அங்கு போர்ச்சுகீசியர்கள் வீழ்ந்த நிலையினையும், அதன் பின் டச்சுக்காரர்கள், டேனியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் வந்த நிகழ்வுகளையும் அப்படியே மனதில் பதிய வைக்கலாம்.
 
உங்களை ஒரு கடற்பயண வீரராகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்களே இந்தியாவிற்கு வருவதைபோலவும், இந்தியாவிலுள்ள வாழ்க்கை முறை, வீடுகள், கைவினைக்கலை, உடைகள், தொழில்கள் ஆகிய முக்கியமானவற்றை நீங்கள் பார்ப்பதாக எண்ணி கொள்ளுங்கள். மேலும் , நீங்கள் அந்த முக்கியமான இடங்களில் வாழ்வதை போலவே கற்பனையை உருவாக்கி கொண்டு அந்த காட்சிகளை ஒரு தொலைக்காட்சி தொடர் போல நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். இதனால் வரலாற்று பாடத்திலுள்ள காட்சிகள் நினைவுப்படுத்த வேண்டிய நேரத்தில் நம் நினைவில் எளிதில் வந்து தோன்றும்.
 

பரீட்சைகளின் போது உதவும் மனப்பயம்

கடந்த கால புதிய ஆய்வுகளிலிருந்து மனப்பயமானது மூலையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, பரீட்சைகளின் போது இறுதி நேரம் கற்கும் விடயங்கள் ஞாபகத்தில் இருப்பது கண்டறியப்பட்டள்ளது.
மன வழுத்தம் ஏற்படும் போது ஹார்மோன்கள் அதிகளவில் எமது மூளையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இதனால் மூலையின் ஞாபக சக்தியின் அளவு அதிகரிக்கப்படுகின்றது.

பேராசிரியர்களின் கருத்துப் படி மனவழுத்தம் ஏற்படும் போது மாணவர்கள் கல்வி கற்கும் போது அந்த விடயங்கள் மனதில் இலகுவாக பதிந்து விடுகின்றது.
அந்த நேரத்தில் சுரக்கும் ஹோமோன்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கின்றன என கூறப்படுகிறது.
உதாரணமாக, எமது வாழ் நாளில் தினமும் பல விதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.

சந்தோஷமான நிகழ்வுகளும் நடைபெறும், கவலையான சம்பவங்களும் இடம்பெறும். அவ்வாறான சம்பவங்களில் எமது மனதை அதிகளவில் பாதித்த அல்லது காயத்தை ஏற்படுத்திய சம்பவங்களே எமக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் மனவழுத்தமாகும்.

பரீட்சை கால இறுதி நேரங்களில் கற்கும் விடயங்கள் எமக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும்.
இதற்கு காரணம் பரீட்சை நெருங்கி விட்டது சிறந்த பெறுபேறு பெற வேண்டும் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என மனம் எண்ணும்.அப்போது எங்கள் முழு கவனமும் பாடங்களிலேயே பதிந்திருக்கும்.
மனவழுத்தம் பயன் தரும் என கருதினாலும், அதிகளவிலான மனவழுத்தம் உடல் நலத்திற்கு கேடு என்பதை நாம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.

சகலகலா வல்லவனாக

அறிவின் ஆழம் புரியட்டும்
சகலகலா வல்லவனாக வேண்டும் எனும் ஆர்வம் இன்று பலரிடம் காணப்படுகிறது. ஒரு விடயத்தைக் கற்க ஆரம்பிப்பார்கள். நண்பனிடம் இன்னொரு திறமை இருக்கும். அதை நோக்கி மனம் தாவும். அதைக் கற்க ஆரம்பிக்கும் போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன்பின் வேறொன்றுக்குத் தாவும். கடைசியில் நமது தனித்துவம் எது என்பது பிரித்தறிய முடியாக் கூட்டாஞ்சோறாகிப் போகும்.

கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து உங்களுடைய நல்ல திறமை எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சட்டென ஒரு விடயம் உங்களுக்குத் தோன்றினால் உண்மையிலேயே உங்களுடைய திறமையை நீங்கள் அறிந்து வைத்திருக்கிaர்கள் என்று அர்த்தம். அந்தத் திறமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதை எழுதுவதாகவோ தேனீர் போடுவதாகவோ.... எதுவாகவும் இருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் யோசிக்கும்போது ஒரு விடயமும் உங்களுக்குப் பிடிபடாமல் போனால் விழித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் திறமைகளை எல்லாம் பட்டியலிட்டு எதில் நீங்கள் வல்லவர். எதில் நீங்கள் சுமார். எது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத விடயம் என வரிசைப்படுத்துங்கள். அந்தப் பட்டியலைப் பார்க்கும்போது ‘இதுதான் என்னோட தனித்துவம் என உங்களுக்கே ஒரு விடயம் நிச்சயம் பிடிபடும்.

உங்களுடைய உண்மையாக விருப்பம் இருக்கும் விடயத்தில் உங்களுக்கு இயல்பாகவே திறமையும் இருக்கும். அந்தப் பகுதியில் நீங்கள் மூச்சடக்கி, முக்குளித்து முத்தெடுக்க வேண்டும். அது நிச்சயம் உங்களை வெற்றிகளின் உச்சியில் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் தேர்வு செய்யும் விடயம் குறித்த தகவல்களையும், விடயங்களையும் தேடித் தேடிப் படிப்பது அடுத்த கட்டம். வெறுமனே வாசிப்பது மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனைகளிலும் அதிகம் ஈடுபடுங்கள். குறிப்பாக ஒரு பாடகராக மாறுவது உங்கள் இலட்சியம் என்றால் அது குறித்த நூல்களைப் படியுங்கள். பாடகர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள்.

அவை உங்களுக்குத் தூண்டுதலாய் மாறும். அதே துறையில் விருப்பமுடைய நண்பர்களைக் கொண்டிருப்பது அடுத்த தேவை. அந்தத் துறையில் திறமை மிக்கவர்கள் நண்பர்களாகக் கிடைத்தால் நல்லது. யாராவது ஒரு நல்ல நபர் வழிகாட்டியாய்க் கிடைத்தால் மிக மிக நல்லது. நல்ல உற்சாகமூட்டக்கூடிய வழிகாட்டி இலட்சியப் பாதையில் உங்களைச் சுமந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றவர்.

இன்றைக்கு இணையம் பல்வேறு குழுக்களையும் சமூக வலைத்தளங்களையும் நமக்கு முன்னால் நீட்டுகிறது. இசைப் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம். தையல் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம். இங்கே அரட்டைகளைத் தவிர்த்த உருப்படியான பல விடயங்கள் பரிமாறப்படும்.

உங்களுக்குப் பிடித்தமான விடயமே வேலையாகிப் போனால் வாழ்க்கையில் ஒருநாள் கூட வேலை செய்யும் உணர்வே வராது’ என்கிறார் கன்பூஷிஸ்.

எதை அபரிமிதமாக நேசிக்கிறோமோ அது நமது உணர்வுகளில் பின்னிப் பிணைந்து நம்மை மாபெரும் வெற்றியா ளராய் கொண்டு சேர்க்கும். வின்சென்ட் வான்கா எல்லாவற்றையும் விட அதிகமாய் ஓவியத்தை நேசித்தார். ஓவியம் வரைய அமர்ந்தால் சாப்பிடவே மறந்துபோய் விடுவாராம். தனது தூரிகையிலிருந்து விழும் ஒவ்வொரு துளியையும் நேசித்ததால்தான் இன்று ஓவிய உலகம் அவரை கொண்டாடுகிறது.